இலங்கையில் சடுதியாகக் குறைந்த முட்டை விலை!

இலங்கையில் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
சடுதியாக விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)