அமெரிக்காவில் உச்சத்தை எட்டிய முட்டை விலை – பிரபல்யமடைந்த கோழி வாடகை சேவை

அமெரிக்காவில் அண்மை வாரங்களாக கோழியை வாடகைக்கு எடுக்கும் சேவை பிரபலமாகியுள்ளது.
முட்டைகளுக்கான விலை மிதமிஞ்சிய அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் மக்கள் கோழிகளை வாங்கி முட்டைகளைப் பெற முற்படுகின்றனர்.
கோழிகளை ஆறு மாதத்துக்கு வாடகைக்கு எடுக்க 500 டொலர் முதல் செலவாகலாம். அப்படி வாடகைக்கு எடுக்கும் கோழிகள் வாரத்துக்கு 12 முட்டைகளை இடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
முட்டையை வாங்குவதைவிட அதற்குக் குறைந்த செலவாவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் செலவு வாடகைச் செலவுடன் நின்றுவிடுவதில்லை. கோழிகளுக்கான இரை, பராமரிப்பு ஆகியவற்றுக்கும் செலவாகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மக்கள் அத்தகைய செலவுகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலால் முட்டைகளின் தொடர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
முட்டைகளின் இருப்புக் குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. பறவைக் காய்ச்சல் தொடர்ந்தால் முட்டைகளின் விலைகளும் தொடர்ந்து அதிகமாகும் என்று கூறப்படுகிறது.