அதிக நேரம் தொலைபேசி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள்
ஒருவரின் தலை எடை சுமார் 4 கிலோ இருக்கும். 3 செ.மீ. குனிந்து கைப்பேசித் திரையைப் பார்க்கும்போது தலையின் எடை இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு கூடிவிடும்.
அப்படியே நீண்ட நேரம் தொழில்நுட்பச் சாதனங்களைப் பார்த்துக்கெண்டே இருந்தால், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டால், வேலையிடத்தின் சூழ்நிலை சரி இல்லை என்றால் கழுத்து வலி போன்ற எலும்பு தசை பிரச்சினைகளுக்கான வாய்ப்புகள் அதிகம்.
தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு இது பற்றி 2023 ஜனவரி கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது-
அதிக நேரம் கைப்பேசியை அல்லது மடிக்கணினியை அடிக்கடி பயன்படுத்துவோர் கழுத்து வலிக்கு ஆளாகலாம். நீண்டகாலப்போக்கில் அவர்களுக்கு முதுகெலும்பிலும் வலி வரலாம் என்று கட்டுரை தெரிவிக்கிறது.
நம்முடைய இப்போதைய வாழ்க்கைப்பாணியை வைத்துப் பார்க்கையில் வரும் ஆண்டுகளில் முற்றிய கழுத்து வலியுடன் கூடிய அதிக நோயாளிகளைக் காணும் வாய்ப்பு இருக்கிறது என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் அலெக்ஸ் டியோ கூறினார்.
சிங்கப்பூரில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள், 2021ல் ஒரு மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.சிங்கப்பூரில் கழுத்து வலி என்பது பொதுவானதாகக் காணப்படுகிறது.
கழுத்து வலி காரணமாக செயல்பட முடியாத நிலை கணிசமான அளவுக்கு ஏற்படலாம். வாழ்க்கைத் தரமும் குறைந்து போய்விட வாய்ப்பு உண்டு என்று ஆய்வாளர்கள் அதில் கூறினர்.
கழுத்து வலியைத் தவிர்த்துக் கொள்ள சிங்கப்பூர் பொது மருத்துவமனை சில ஆலோசனைகளைத் தெரிவித்து இருக்கிறது.
தொழில்நுட்பச் சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் அடிக்கடி ஓய்வு எடுங்கள்.
மடிக்கணினிக்குப் பதிலாக மேசைக் கணினியைப் பயன்டுத்துங்கள். முறையாக அமர்ந்து வேலை செய்யுங்கள் என்று அது ஆலோசனை தெரிவித்துள்ளது.