மன்னிப்பு கேட்டா ஓட்டுபோடுவீங்களா! சீமான் மீண்டும் சர்ச்சை கருத்து
“ சிறுபான்மையினர் குறித்து தவறாக பேசிவிட்டதாக கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறும் ஜவாஹருல்லா போன்றோர் நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? ” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பின் போதே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”சிறுபான்மையினர் குறித்து தவறாக பேசிவிட்டதாக கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறும் ஜவாஹருல்லா போன்றோர் நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருந்துவதும் வருத்தம் தெரிவிப்பதும் என்னை சார்ந்த இஸ்லாமியர்களுக்குத்தான்.
அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மதங்கள் இஸ்லாமும் கிறிஸ்தவமும். ஆனால், இவர்கள் என்றாவது அநீதிக்கு எதிராக போராடியதுண்டா? முதுகில் குத்திய துரோகி கலைஞர் என ஜவாஹிருல்லா பேசினார். இன்று ஒரு சீட்டிற்காக அந்த துரோகியுடன் நிற்கின்றனர். சிறுபான்மையினர் குறித்த உரிமை, உறவு, வலி எல்லாம் எனக்குள்ளதால் நான் பேசுவேன்.
என்னை பற்றி பேசுவதற்கு நடிகர் ராஜ்கிரண் அண்ணனிற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால், அவரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பேசுவதற்கு இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்?” என தெரிவித்துள்ளார்