புதிய மருத்துவ சட்டமூலம் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

புதிய மருத்துவ சட்டமூலத்தை 06 மாதங்களுக்குள் தொகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நல்ல சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அடுத்த 03 மாதங்களுக்கான அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 30 பில்லியன் ரூபாவை மேலதிகமாக மருத்துவப் பொருட்களுக்காக ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)