குற்றப் புலனாய்வு வரை சென்ற கல்வித் தகைமை விவகாரம்
சபாநாயகர் அசோக் சபுமல் ரங்வலவின் கல்வித் தகைமை விவகாரம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வரை சென்றுள்ளது.
பல ஜனதா பெரமுனவின் மகரம் அமைப்பாளர் தினேஷ் அபேகோன் இவ்விடயமாக இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
சபாநாயகரின் பேராசிரியர் கல்வித் தகுதி குறித்து விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அவர் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னரும் இவரால் பிரயோகிக்கப்பட்ட பேராசிரியர் கல்வித் தகுதி குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவுகிறது சபாநாயகருக்கு இத்தகைமை இருப்பதா இல்லையா என பொதுமக்களுக்கு துரிதமாக அறிவித்தல் வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டியுள்ளார்.
நாட்டில் ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் முக்கியமான பேசு பொருளாகியுள்ள இவ்விடயம் குறித்து சபாநாயகர் மிக விரைவில் பொது மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை வழங்குவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.