நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பே அவசியம் – விமல்
” நாட்டில் கல்வி மறுசீரமைப்பென்பது Education reform சிறப்பான பண்புகளுடன் இடம்பெற வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார்.
எனினும், கட்சியொன்றின் தேவைக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையை ஏற்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கை. அப்பணியை முன்னெடுக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது இரண்டாவது விடயமாகும்.
எனவே, எமது முதலாவது கோரிக்கையின் பிரகாரம் கல்வி மறுசீரமைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நான் நாட்டுக்காகவே எனது கடமையை நிறைவேற்றினேன். எனவே, இதன்மூலம் கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு எவர் உரிமை கொண்டாடினாலும் எனக்கு பரவாயில்லை. “ என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.




