பொருளாதார சிக்கல் : வெளிநாடுகளில் யாசகம் கேக்கும் பாகிஸ்தானியர்கள்!
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட யாசகர்களில் 90 சதவீதமானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தி டான் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஏராளமான யாசகர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கான செனட் நிலைக்குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் சுல்பிகர் ஹைதர், செனட் குழுவில் திறன்மிக்க மற்றும் திறமையற்ற தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பான விவாதத்தின் போது இந்த தகவலை முன்வைத்துள்ளார்.
சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குச் செல்ல பல யாசகர்கள், யாத்திரை விசாவைப் பயன்படுத்திக் கொண்டதாக சுட்டிக்காட்டிய அவர், புனித தலங்களில் கைது செய்யப்பட்டுள்ள பிக்பாக்கெட் திருட்டு சம்பவங்களில் பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பாகிஸ்தானில் 50,000 பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவதன் மூலம் உள்நாட்டு கையிருப்பு அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.