இலங்கையில் பொருளாதார நெருக்கடி – யாசகர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு

இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நகர சபை மற்றும் மாநகர சபைகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, மேலும் யாசகர்களின் எண்ணிக்கை 3,700 ஐ நெருங்குகிறது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 1600 யாசகர்கள் இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட யாசகர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் சில நிறுவனங்கள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த சிலர் யாசகர்களாக மாறியிருப்பது இது தொடர்பான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், யாசகர்களுக்கு புனர்வாழ்வளிக்க ஸ்தாபிக்கப்பட்ட ரிதிகம புனர்வாழ்வு நிலையத்தின் கொள்ளளவு தற்போது எல்லையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)