ட்ரம்பின் வரி விதிப்பின் எதிரொலி : போயின் விமானத்தை திருப்பி அனுப்பிய சீனா!

சீனாவின் ஜியாமென் ஏர்லைன்ஸுக்கு டெலிவரி செய்வதற்காக அனுப்பப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானம் மீளவும் அமெரிக்காவிற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
இது உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளில் ஆழமடைந்து வரும் பிளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இறுதி டெலிவரிக்காகக் காத்திருந்த விமானம், மாலை 6.11 மணிக்கு சியாட்டிலில் உள்ள போயிங் ஃபீல்டில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அது திரும்புவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனா மீது அதிக வரிகளை விதித்ததால் ஏற்பட்ட அதிகரித்து வரும் வர்த்தக இடையூறை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
(Visited 4 times, 4 visits today)