சோவியத் குடியரசின் முன்னாள் தலைநகருக்கு இயக்கப்படும் ஈஸி ஜெட் விமானம் : முக்கிய நாடுகளின் வான்வெளியை தவிர்க்க தீர்மானம்!
பிரிட்டனின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனம் சோவியத் குடியரசின் முன்னாள் தலைநகருக்கு ஒரு புதிய இணைப்பை அறிமுகப்படுத்துகிறது.
EasyJet அடுத்த ஏப்ரல் முதல் லூடன் விமான நிலையத்திலிருந்து ஜோர்ஜியாவின் திபிலிசிக்கு பறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் பயணநேரம் 06 மணிநேரம் 40 நிமிடம் என வரையறுக்கப்பட்டாலும், ரஷ்ய மற்றும் உக்ரேனிய வான்வெளியைத் தவிர்க்கும் பாதையில் செல்ல வேண்டியிருப்பதால் இதற்கு அதிக நேரம் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான ஆய்வாளர் சீன் மௌல்டன் இந்த விமான சேவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
(Visited 26 times, 1 visits today)





