ஈஸ்டர் ஞாயிறு படுகொலை சம்பவம்; பெற்றோர்களால் பொலிஸில் சிக்கி கொண்ட சிறுவன் !
அமெரிக்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 13 வயது சிறுவனை பொலிசார் இறுதியில் கைது செய்துள்ளனர்.
ஜார்ஜியா மாகாணத்தில் LaGrange பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து ஏப்ரல் 9ம் திகதி 20 வயதான டவாரிஸ் லிண்ட்சே என்பவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் ,மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 13 வயதான ஜேடன் கன்ஸ்பி என்ற சிறுவனை பொலிசார் தேடியுள்ளனர்.
ஆனால் சிறுவன் ஜேடன் கன்ஸ்பி தலைமறைவான நிலையில், ஏப்ரல் 12ம் திகதி கைதாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 24ம் திகதி சிறுவன் ஜேடன் கன்ஸ்பி கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுவன் ஜேடன் கன்ஸ்பியின் குடும்பத்தினரே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.