உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரி எங்கே?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. குறித்த நபர் கைது செய்யப்பட்டுவிட்டாரா? என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.
இது தொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,
“ பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பிறந்த நாள் இன்றாகும். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது சேவை தொடர வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என பேராயரிடம் இவர்கள் உறுதியளித்திருந்தனர். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அவ்வாறு நடந்ததா? சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டாரா எனவும் எதிர்க்கட்சி தலைவர் வினவினார்.




