இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரிக்காக மொட்டு கட்சி காத்திருப்பு!

“எமது ஆட்சியின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேசம்வரை சென்ற பேராயர் தற்போது மௌனம் காப்பது ஏன்?

பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க கோரி அவர் வீதியில் இறங்காமல் இருப்பது ஏன்?”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi கேள்வி எழுப்பினார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் நடத்தப்பட்டது என்பதுபோலவே காண்பிப்பதற்கு கடந்த காலங்களில் தகவல் பரப்பட்டது.

போரை முடித்த தலைவர் உள்ள கட்சியில் உள்ள எமக்கு குண்டு வெடிக்க வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு கிடையாது.

தமது ஆட்சியின்போது பிரதான சூத்திரதாரியை கைது செய்வோம் என தேசிய மக்கள் சக்தியினர் கூறினார்கள். அதனை அவர்கள் செய்ய வேண்டும்.

எமது ஆட்சியின்போது பேராயர் வீதியில் இறங்கினார். சர்வதேசம்வரை சென்றார். தற்போது அவர் வீதிக்கு இறங்க வேண்டும்.

பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.” – எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!