இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : சர்வதேச விசாரணைக்கு செல்ல மாட்டோம் – ரணில்!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

ஜேர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேற்படி ஆட்சேபணை  தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய நீதிபதி, முன்னாள் விமானப்படைத் தளபதி மற்றும் பிரபல சட்டத்தரணி ஆகியோர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல கேள்விகளுக்கு தனது நிதானத்தை இழந்ததாக சிங்கள ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!