ஜப்பான் – பிலிப்பைன்ஸ் நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்
ஜப்பானின் புக்குஷிமா பகுதியை இன்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.
நிலநடுக்கம் 4 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் கூறியது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பொருட்சேதமும் உயிருடற்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இதேவேளை, பிலிப்பைன்ஸில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகப் பிலிப்பைன்ஸின் எரிமலை, நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.
சேதமும் பின்னதிர்வுகளும் ஏற்படக்கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்தது. பொருட்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் ஏதுமில்லை.
பிலிப்பைன்ஸில் “Ring of Fire” எனும் பகுதியில் அமைந்துள்ளது. “Ring of Fire” பகுதி பசிபிக் கடலில் உள்ளது. அதில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்கள் இடம்பெறும்.