ஜப்பானில் நிலநடுக்க அச்சம்: பயணத் திட்டங்களை ரத்து செய்த சுற்றுலாப்பயணிகள்
ஜப்பானைச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கக்கூடும் என்று முதல்முறையாக எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட பலர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டுள்ளனர்.ஆயிரக்கணக்கான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இக்காலகட்டத்தில் ஜப்பானில் சுற்றுப்பயணிகள் பலர்பயணம் மேற்கொள்வது வழக்கம்.ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
பலர் தங்கள் பயணத் திட்டங்களை ரத்து செய்துவிட்டதால் ஜப்பானின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஹோட்டல்கள் ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று குறைகூறின.
ஆகஸ்ட் 8ஆம் திகதியன்று ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவானது.இதில் குறைந்தது 15 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டு ஜப்பானில் எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளபோதிலும் நிலநடுக்கம் கண்டிப்பாக ஏற்படும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.