அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் பதிவு!
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இன்று (28.07) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் நகரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 22 அன்று தவாங்கில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக அருணாச்சலப்பிரதேசத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





