இலங்கையின் பல இடங்களில் நில அதிர்வு பதிவு!
இலங்கையின் பல பகுதிகளில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் பு சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில், 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
அத்துடன் கொழும்பு பத்தரமுல்ல அக்குரச காலி உட்பட பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்குள் மிகவும் ஆழமான பகுதியில் பூகம்பம் மையம்கொண்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)





