திருகோணமலை கடற்பகுதியில் சற்று முன்னர் பதிவான நிலநடுக்கம்!

திருகோணமலை கடல் பகுதியில் இன்று (18.09) மாலை 3.9 ரிக்டர் அளிவல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்க வரைபடங்கள் மகாகனதர, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.
(Visited 1 times, 2 visits today)