செய்தி

துருக்கியில் நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்கியதால் வீதியில் திரண்ட மக்கள்!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (02.10) பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 5.0 ரிக்டர் அளவில் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்தான்புல்லின் தென்மேற்கே மர்மாரா கடலில் குறித்த நிலநடுகம் மையம் கொண்டிருந்ததாக AFAD பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை துருக்கியில் கடந்த மாதம் இடம்பெற்ற நிலடுக்கத்தில் 16 கட்டடங்கள் சேதமடைந்ததுடன், ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் கயாமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி