சாண்டோரினியில் நிலநடுக்கம் : அவசரகால நிலை அறிவிப்பு, பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/san-1.jpg)
கிரேக்க அதிகாரிகள் தீவில் அவசரகால நிலையை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, சாண்டோரினி மேலும் பல நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இந்தத் தீவு, ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கிட்டத்தட்ட 15,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நேற்று இரவு, உள்ளூர் நேரப்படி இரவு 8.16 மணிக்கு சாண்டோரினி மற்றும் அமோர்கோஸ் இடையே கடலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்து 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதன்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சமீபத்திய அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இது இதுவரை பதிவான சக்திவாய்ந்த நிலடுக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அங்கு செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சாண்டோரினிக்குச் சென்றால், பழைய கைவிடப்பட்ட கட்டிடங்களைப் பார்வையிடுவதைத் தவிர்க்கவும், உட்புறக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் பிரிட்டிஷ்காரர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிரேக்க நில அதிர்வு நிபுணர் அகிஸ் செலெபிஸ், 50 பேரைக் கொன்று நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்திய 1956 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்திற்கு காரணமான அதே பிளவு கோடு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.