இத்தாலியில் நிலநடுக்கம் – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

இத்தாலியில் நேற்றைய தினம் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் நேப்பள்ஸ் நகருக்கு அருகே எரிமலையொன்றில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அந்தப் பகுதியில் உணரப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் தங்கள் இருந்த கட்டடங்களை விட்டு அவசரமாக வெளியேறியுள்ளனர்.
எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலநடுக்க மையப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பெண்கள் சிறையிலிருந்து கைதிகள் அனைவரையும் அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 15 times, 1 visits today)