மெல்போர்ன் நகரில் உணரப்பட்ட நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் நகரின் வடக்கே 15 கிலோ மீற்றர் தொலைவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.26 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.4 அலகுகளாக பதிவானது. இதனால் இதன் தீவிரம் குறைவு என்பதால் பொதுமக்கள் இடையே பெரிய அளவில் பீதி ஏற்படவில்லை.
அதிகாரிகள் கூறும்போது பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றனர்.
பெண்ணொருவர் சமூக ஊடகத்தில், ‘நான் முன்பு ஏதோ உணர்தேன் என்று நினைத்தேன். லேசானது, ஆனால் நான் ஆச்சரியப்பட்டேன்’ என குறிப்பிட்டார்.
(Visited 16 times, 1 visits today)