இலங்கையில் இளைஞனின் உயிரை பறித்த Earphones

தெற்கு களுத்துறையில் கையடக்கத் தொலைபேசியில் Earphonesயை இணைத்துக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் இமாத் என்ற 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த போது அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 37 times, 1 visits today)