இலங்கையில் அதிகாலையிலேயே பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை பொனதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான அகம்பொடி சஜித் சமன் பியந்த என்றழைக்கப்படும் சமன் பியந்தவின் வீட்டின் மீது இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல தோட்டாக்கள் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளைத் தாக்கியதுடன், சம்பவத்தின் போது சமன்கொல்லவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்தனர்.
(Visited 15 times, 1 visits today)





