e-visa குழப்பநிலை : வெளிநாடு சென்றுள்ள பிரித்தானியா வாழ் மக்களுக்கு சிக்கல்!
பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் டிஜிட்டல் விசாக்களுக்கான மாற்றத்தை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய தொழில்நுட்ப சிக்கல்கள் பயண குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பிரச்சாரகர்கள் அஞ்சுகின்றனர்.
பிரித்தானிய அரசாங்கம் டிஜிக்டல் விசாவிற்கு மாறுவதால் வேறு நாடுகளுக்கு சென்றுள்ள பிரித்தானிய குடியிருப்பாளர்கள் மீண்டும் பிரித்தானியா திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம் என புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
பிரிட்டிஷ் வதிவிட உரிமைகளுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றாக eVisas க்கு மாறுவது மார்ச் 2025 இன் இறுதியில் தொடங்கும் என்று உள்துறை அலுவலகம் கடந்த வாரம் அறிவித்தது. இருப்பினும் தொழில்நுட்ப சிக்கலால் தாமதமாகியுள்ளது.
தாமதம் பெரும்பாலும் வரவேற்கப்பட்டாலும், கால அட்டவணையில் மாற்றம் வெளிநாட்டு விமான நிலைய ஊழியர்கள் மற்றும் எல்லை அதிகாரிகளை சரியான நேரத்தில் சென்றடையாது என்ற பரவலான கவலைகள் உள்ளன. இந்நிலையிலேயே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.