DV லாட்டரி விசா : அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பு!
அமெரிக்காவின் DV லாட்டரி விசாவிற்கான பதிவுக்காலம் இன்னும் தொடங்கப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
மோசடியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வதால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ DV-2027 பதிவு திகதிகள் மற்றும் செயல்முறைக்கான ஏதேனும் புதுப்பிப்புகள் கிடைக்கும்போது மட்டுமே அமெரிக்க வெளியுறவுத்துறையால் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்பட்ட தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான dvprogram.state.gov அல்லது https://dvprogram.state.gov ஐ மட்டுமே நம்பியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
(Visited 3 times, 4 visits today)





