பாகிஸ்தானை உலுக்கிய புழுதிப் புயல் – லாகூரில் 8 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் – லாகூரில் வீசிய கடும் புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் வீசிய புழுதிப் புயலால் ஏராளமான மரங்கள் அடியோடு விழுந்தன.
இது தொடர்பாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மக்கள் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்ததாலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் தவிர 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





