பெருவில் குடிபோதையில் ரயில் பாதையில் தூங்கிய நபர் உயிர்பிழைப்பு

பெருவில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது சனிக்கிழமை ஒரு சரக்கு ரயில் மோதியதில் குடிபோதையில் இருந்த ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“ரயில் அவரை மோதியது, ஆனால் ஏதோ ஒரு அதிசயத்தால் அவர் உயிரிழக்கவில்லை,” என்று லிமா மாகாணத்தில் உள்ள ஏட் நகர பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் ஜேவியர் அவலோஸ் தெரிவித்துள்ளார்.
ரயில் பெருவியன் ஆண்டிஸ் நோக்கி வழக்கமாக ஓடிக்கொண்டிருந்தபோது, 28 வயதான ஜுவான் கார்லோஸ் டெல்லோவை மோதியது, பின்னர் ரயில் அது விரைவாக நின்றதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட கண்காணிப்பு காட்சிகளில், அந்த இளைஞனை பல மீட்டர் இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது.
அவரது இடது கையில் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக அவலோஸ் குறிப்பிட்டார்.
(Visited 1 times, 1 visits today)