உத்தரகாண்டில் குடிபோதையில் குழந்தையை பள்ளத்தாக்கில் வீசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலம் பவுரி (Pauri) மாவட்டத்தில், ஒருவர் தனது மூன்று மாத மகனை குடிபோதையில் ஒரு பள்ளத்தாக்கில் வீசி விட்டு பின்னர் அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லான்ஸ்டவுன் (Lansdowne) பகுதியில் உள்ள டபோலி (Dapoli) கிராமத்தில் வசிக்கும் 30 வயது லலித் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
லலித் மதுவுக்கு அடிமையானவர் என்றும், அவர் தனது மனைவி கமலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும், அதைத் தொடர்ந்து அவர் வீட்டை விட்டு வெளியேறி கோபத்தில் குழந்தையை பள்ளத்தாக்கில் வீசியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கண்டுபிடிக்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. இதனால் விரக்தியில் லலித்தும் பள்ளத்தாக்கில் குதித்ததாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.