இந்தியா செய்தி

ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்

ஏர் இந்தியா விமானத்திற்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது மதுபோதையில் இருந்த ஒருவர் சிறுநீர் கழித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில்தான் இப்படி நடந்துள்ளது.

பாங்காக்கில் விமானம் தரையிறங்கிய பிறகு, பாதிக்கப்பட்ட பயணிக்கு உதவ ஏர் இந்தியா முன்வந்துள்ளது. ஆனால், அந்த உதவியை ஏற்க மறுத்திருக்கிறார் அந்த பயணி.

இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், அமைச்சகம் அவற்றைக் கவனத்தில் எடுத்து கொள்கிறது. விமான நிறுவனத்திடம் பேசுவோம். ஏதேனும், தவறு நடந்தால் நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மது அருந்திய பிறகு சக பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா, கடந்த 2023 ஆம் ஆண்டு, சக பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அவரைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 37 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!