உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயது மகனை கொலை செய்த குடிகார தந்தை

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் தனது ஒரு வயது மகனை குத்தி கொலை செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைரியா பகுதியில் உள்ள சுரேமன்பூர் கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரூபேஷ் திவாரி தனது மகன் கினுவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கினு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபேஷ் ஒரு குடிகாரர் என்றும், அவர் தனது மனைவி ரினா திவாரியை அடிக்கடி அடிப்பார் என்றும் பக்கத்து வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று குடி போதையில் வந்த ரூபேஷ் தனது தந்தை கமலேஷ் திவாரி மற்றும் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கணவருக்கு பயந்து, மகனையும் மூன்று வயது மகள் அனன்யாவையும் வீட்டில் விட்டுவிட்டு தனது மாமனாருடன் மற்றொரு கிராமவாசியின் வீட்டிற்கு சென்ற போது கோபத்தில் மகனை கொலை செய்துள்ளார்.
அடுத்த நாள் ரினா திவாரி வீடு திரும்பிய போது தனது மகனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் ரினா திவாரி அளித்த புகாரை தொடர்ந்து ரூபேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.