கொழும்பிலிருந்து மும்பை வந்த பெண்ணிடமிருந்து 470 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
கொழும்பிலிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒரு பெண் பயணியிடமிருந்து சுமார் 470 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 4.7 கிலோ கோகைன்(cocaine) போதைப்பொருளை இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பயணி வந்த சிறிது நேரத்திலேயே அவரை தடுத்து நிறுத்தி, அவரது பொருட்களை விரிவான சோதனைக்கு உட்படுத்தியதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் காபி(coffee) பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது போதைப்பொருள் பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குற்றவாளிகள் ஐந்து பேரும் போதை மருந்துகள் மற்றும் மனநோய் தூண்டும் பொருட்கள் (NDPS) சட்டம், 1985ன் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)





