பெல்ஜியத்தில் இருந்து திருகோணமலைக்கு அஞ்சல் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள்
திருகோணமலை பிரதான தபால் நிலையத்தில் மெண்டி(Mandy) என்ற போதைப்பொருளை கொண்ட 02 பொதிகளை திருகோணமலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள திருகோணமலை தபால் அலுவலகத்துக்கு வருகை தந்த 26 வயது பொன்னுத்துரை பனவன் என்பவர் துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு போதைப்பொருள் பொதிகளும் பெல்ஜியம்(Belgium) நாட்டிலிருந்து அஞ்சல்(Post) மூலம் திருகோணமலை பிரதான தபால் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது துபாயில்(Dubai) உள்ள திருகோணமலையின் மூதூர்(Muthur) நகரைச் சேர்ந்த நௌசாத் என்ற நபர், இரண்டு பொதிகளையும் தபால் நிலையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





