இலங்கை செய்தி

டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: விநியோகித்த மூவர் கைது!

டுபாயில் பதுங்கி இருந்து இலங்கையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நிழல் உலக தாதா டுபாய் இஷாரவின் மூன்று சகாக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம், கம்பளை பகுதியில் வைத்தே கம்பளை பொலிஸாரால் இன்று (17) காலை இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் சகிதம் சிக்கியுள்ள இவர்களிடம் தற்போது பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் டுபாய் இஷார என்பவரின் போதைப்பொருளை கம்பளை பகுதியில் இவர்களே விநியோகித்து வந்துள்ளனர்.

கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொழுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று இவர்கள் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளனர்.

கம்பளை தொழுவ பகுதியில் வைத்து இருவரும், மஹர பகுதியில் வைத்து மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை அங்கம்ம, கவல்வல ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள், கொழும்பில் இருந்து போதைப்பொருளை பெற்றுள்ளனர் என தெரியவருகின்றது. கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!