அட்லாண்டிக் பெருங்கடலில் போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு : அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டு நடவடிக்கை!
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த ‘நார்கோ நீர்மூழ்கிக் கப்பல்’ ஒன்றிலிருந்து 09 டன் கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த போதைப் பொருட்களை முழுமையாக எடுத்துச் செல்வதற்கு முன்பே குறித்த கப்பல் நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளின் உதவியுடன் போர்த்துகீசிய காவல்துறை இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் இந்தப் படகு லத்தீன் அமெரிக்காவிலிருந்து வருகை தந்ததாகவும், அதில் மூன்று கொலம்பியர்களும் ஒரு வெனிசுலா நாட்டவரும் இருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபோன்ற கப்பல்கள் சமீபத்திய ஆண்டுகளில் ‘நார்கோ நீர்மூழ்கிக் கப்பல்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
போதைப்பொருள் கும்பல்கள் அவற்றைப் பயன்படுத்தி கடல்கள் மற்றும் பெருங்கடல்களைக் கடந்து போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





