கொழும்பில் மருந்துகளின் விலை மூன்று மடங்காக உயர்வு
கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளில் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தனியார் வைத்தியசாலைகள் இவ்வாறு செயற்படுவது ஏற்புடையதல்ல என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால், நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
மக்களின் உயிரைப் பற்றி சிந்திக்காமல் மருந்து விலையை உயர்த்திய மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சில வைத்தியசாலைகள் பராசிட்டமோல் மாத்திரைக்கு 15 ரூபா கட்டணமாக நோயாளர்களிடம் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அதிகபட்ச விலை மூன்று ரூபாய் எழுபத்தைந்து காசுகள். இது தொடர்பாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளது.