இந்தியா

தெலுங்கானாவில் பண்ணை வீட்டில் போதை விருந்து; 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் கைது

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து(Rave party)  நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் போதையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மொத்தமாக வந்தவர்களில் 12 பேர் பெண்கள், அவர்களில் ஐந்து பேர் சிறுமிகள்.

அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே சமூகவலைத்தளம் மூலமாக நபர்களை திரட்டி போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கனடாவை சேர்ந்த இஷான் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே