போலியான பெயர் பட்டியலை பயன்படுத்தி மருந்து இற்க்குமதி : குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை!

போலியான பெயர்ப் பட்டியலைப் பயன்படுத்தி இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்தமைக்கு காரணமான நபர்களுக்குத் தேவையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமை வருத்தமளிப்பதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் கலாநிதி அஜந்த ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் மருந்து பற்றாக்குறை பிரச்சினை நிலவிவருகிறது. தரமற்ற மருந்து இறக்குமதியால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனை பிரதான காரணமாக சுட்டிக்காட்டி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது.
(Visited 10 times, 1 visits today)