கிரேட்டர் மான்செஸ்டர் M6 வீதியில் போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு
கிரேட்டர் மான்செஸ்டர் M6 வீதியில் பொலிஸார் போலீசார் தடையினால் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) விகன் (Wigan) அருகே முன்னதாக M6 நெடுஞ்சாலை (M6 Motorway) பொலிஸாரால்
மூடப்பட்டதால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் அதிகாரிகள் கூறியதன் படி, ஒரு விமான ஆம்புலன்ஸ் (air ambulance) தரையிறங்கியதனால், ஸ்டாண்டிஷ் (Standish) மற்றும் ஓரெல் (Orrell) பகுதிகளில் தெற்கு நோக்கி போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வீதி மீண்டும் திறக்கப்பட்டாலும், ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லேலேண்ட் (Leyland) பகுதிக்கு செல்லும் வழிகளில், சார்னாக் ரிச்சர்ட் சேவை நிலையம் (Carnock Richard Service Station) வழியாக போக்குவரத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





