ஐரோப்பா செய்தி

வீதியில் குப்பை வீசும் சாரதிகள் வாகனம் செலுத்த தடை – பிரித்தானியாவில் கடுமையாகும் சட்டம்

புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ், வாகனம் செலுத்தும் போது வீதியில் குப்பை வீசும் சாரதிகளின் உரிமத்தில் அபராதப் புள்ளிகள் வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக குற்றச் செயலில் ஈடுபட்டால் வீதிகளில் வாகனம் செலுத்த தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கைகள் இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales) ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட உள்ளன.

மேலும், குப்பைகளை வீதியில் வீசுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட அபராதப் புள்ளிகள் பெற்றிருந்தார், அந்த சாரதி வாகனம் செலுத்துவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

2024–2025 காலகட்ட அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து முழுவதும் உள்ள கவுன்சில்கள் 1.26 மில்லியன் குப்பை வீச்சு சம்பவங்களை பதிவு செய்துள்ளன. அவற்றில் சுமார் 62 சதவீதம் சம்பவங்கள் வீட்டுக் கழிவுகளுடன் தொடர்புடையதாகும்.

சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான துறை (Department for Environment, Food & Rural Affairs – Defra) வெளியிட்ட தகவலின்படி, புதிய “கழிவு குற்ற செயல் திட்டம்” பிரித்தானியாவின் சுற்றுப்புறங்களை சுத்தமாக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் (House of Lords) வெளியிட்ட அறிக்கையில் கடுமையான கழிவு குற்றங்களை எதிர்கொள்ளும் முயற்சிகள் போதிய முன்னுரிமை பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சேவைகள் சங்கத்தின் மதிப்பீட்டின்படி, இங்கிலாந்தில் குப்பை பிரச்சினைகளை சமாளிப்பதற்கு ஆண்டுக்கு சுமார் £1 பில்லியன் செலவாகிறது.

ஆக்ஸ்போர்ட்ஷையர் (Oxfordshire) பகுதியில் மலையளவு குவிந்திருந்த குப்பைகள் குறித்து கேள்வி எழுந்தபோது, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) குற்றவாளிகளிடம் இருந்து சுத்தம் செய்வதற்கான செலவை வசூலிக்க கிடைக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது, 1990 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (Environmental Protection Act 1990) படி குப்பையை சட்டவிரோதமாக வீசுவது ஒரு குற்றமாகும். இதற்காக நீதிமன்றங்கள் அபராதம் அல்லது சிறைத்தண்டனை போன்ற பல்வேறு தண்டனைகளை விதிக்கும் அதிகாரம் கொண்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!