போக்குவரத்து விதிமீறல்களுக்கு காரணம் போதை? 43% ஓட்டுநர்கள் ஐஸ் பயன்படுத்துவதாக தகவல்
கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களில் 43 சதவீதம் பேர் ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் என ஆய்வொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் கொழும்பில் 25 சதவீத ஓட்டுநர்கள் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





