(update) தலாவ பேருந்து விபத்து தொடர்பில் சாரதி கைது!
அனுராதபுரம், தலாவையில் இன்று காலை நடந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 16 வயதுடைய சாதாரணதர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 39 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவர் தலாவ ஹங்குரங்கெத்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவரின் உடல் அனுராதபுரம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





