தமிழகத்தில் முன்னிலை பெற்ற திராவிட முன்னேற்ற கழக கூட்டணி

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியிட்ட அனைத்து 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எவரும் அங்கு முன்னிலையில் இல்லை.
இவ்வாண்டு ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து இம்மாதம் முதல் திகதி வரை 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்துக்கான மொத்த இடங்கள் 543ஆகும்.
ஒரு கட்சியோ கூட்டணியோ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க குறைந்தது 272 இடங்களில் வெல்ல வேண்டும்.
(Visited 33 times, 1 visits today)