இலங்கை செய்தி

சஜித் முன்வைத்துள்ள கடும் நிபந்தனைகளால் இழுபறி

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள பல முக்கிய நிபந்தனைகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில்  பொது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயங்களில் ஒன்றாகும்.

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணியில் இருக்கக் கூடாது என சஜித் தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கையும் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு பலத்த தடையாக மாறியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள மற்றுமொரு நிபந்தனை என்னவென்றால், புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐ.தே.க இணைந்து புதிய பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர முடியாத பின்னணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!