பிரித்தானியாவின் அடுத்த தேர்தல் : கன்சர்வேடிவ் – சீர்திருத்த UK இணைகிறதா?
அடுத்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியை தோற்கடிப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சியும் சீர்திருத்த யுகே கட்சியும் இணக்க நிலைக்கு வரலாம் என சீர்திருத்த UK கட்சியின் உறுப்பினர் நடின் டோரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் மனநிலை வலதுபுறமாக நகர்வதை கருத்துக்கணிப்புகள் தெளிவாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்சர்வேடிவ் வாக்குகளும் சீர்திருத்த UK கட்சியின் வாக்குகளும் இணைந்தால், சக்திவாய்ந்த அரசியல் பலமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து விலக்குவதற்காக, இரு கட்சிகளுக்கும் இடைய உடன்பாடொன்று எட்டப்படலாம் என்றும் நடின் டோரிஸ்
மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது முழுமையான கட்சி இணைப்பு அல்ல என்றும், தேர்தல் புரிந்துணர்வு மாதிரியானதாக இருக்கலாம் என்றும் விளக்கினார்.
இதனிடையே நைகல் ஃபராஜ் ஒரு வலிமையான பிரச்சாரகர் என்பதாலும், அவரது கட்சி தேர்தல்களில் நல்ல முன்னேற்றம் காணும் என்றும் அவர் கூறினார்.





