பாராளுமன்றில் பேசும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – சாணக்கியன் காட்டமான உரை

முன்னாள் அரசாங்கத்தின் முன்னாள் அரசியல் வாதிகளின் குறைகளை கூறி கூறி பாராளுமன்றத்தின் பொன்னான நேரங்களை வீணடிக்க வேண்டாம்.
நாட்டு மக்களின் நலன் கருதி முற்போக்கான சிந்தனையுடன் நல்ல எண்ணங்களுடன் பாராளுமன்றத்திலும் வெளியிலும் செயல்படுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இரா.இராசமாணிக்கம் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
நாங்கள் ஒன்றாக இருந்தவர்கள். ஜனாதிபதியுடன் அனுரவுடன் பாராளுமன்றத்தில் ஒன்றாக இருந்து செயலாற்றியவர்கள்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நான் புதியவனாக பாராளுமன்றத்தில் நுழைந்தபோது நிறைய அறிவுரைகள் தந்தவர்.
அவரின் முகத்திற்காகத் தான் நாட்டு மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்ஃ அவர்கள் இல்லாவிட்டால் நீங்கள் எவரும் இன்று பாராளுமன்றத்தில் இல்லை.
இன்று சில NPP பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் தலைக்கனத்தில் பேசுகிறார்கள்.
நாங்கள் பொதுமக்களின் விடயங்களை பாராளுமன்றத்தில் பேசும் போது எடுத்ததற்குஎல்லாம் முன்னாள் அரசாங்கம் முன்னாள் அரசியல்வாதிகள் என பழைய பல்லவியைப் பாடிப்பாடி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்.
இவ்வாறு போனால் பொது மக்களும் உங்கள் எல்லோரையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.
நான் நல்லதை கூறுகிறேன். நல்லவைகளை நாட்டு மக்களுக்கு தேவையான விடயங்களை பேசும் போது பொறுப்போடு உரையாற்றுங்கள்.
நேற்று நான் யானைகளின் பிரச்சினை பற்றி கதைத்தேன், மதுபான நிலையங்கள் பற்றி கதைத்தேன்.
ஆனால் இதற்கான பொறுப்பான பதில்களை தராமல் சும்மா நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்களுக்கு யானைகளால் பிரச்சினைகள் இருக்கின்றன.
இதனால் அவற்றுக்கும் பொது மக்களுக்கும் பாரிய பிரச்சினைகள் உண்டு.
இவற்றுக்கு தீர்வு காண எங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்
இந்த அரசாங்கம் அரகலையின் எழுச்சியால் வந்தது. நாங்களும் அரகலய செய்தோம்ஃ பரந்தளவில் போராட்டங்கள் செய்தோம்.
அந்த உந்து சக்தியில் தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்து உள்ளார்கள்.
ஆகவே இந்த அரசாங்கத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு…. எல்லோரின் நன்மைக்காகவும் இவ்வாறு பேசுகிறேன்.
நல்ல விடயங்களில் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறோம். எங்களின் உதவிகளையும் பெற்று நாட்டு மக்களுக்கு முன்மாதிரியான சேவைகளை செய்யவும் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள் என உரையாற்றி ஒரு காட்டமான உரையை நிகழ்த்தியுள்ளார்.