நெருப்புடன் விளையாட வேண்டாம் – சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த பரபரப்பு எச்சரிக்கை
தைவானுக்கு புதிய இராணுவ உதவி மற்றும் ஆயுத விநியோகத்தை அமெரிக்கா அறிவித்ததை அடுத்து சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, அமெரிக்கா நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் ஆபத்தான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் தைவான் மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ள சீனா, தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கூறி, தைவானுக்கு ஆயுதங்கள் மற்றும் உதவிகளை அனுப்புவதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால் சீனாவின் செல்வாக்கை கடுமையாக நிராகரிக்கும் தைவான் அரசு, தனது நாடு சுதந்திர நாடு என்று கூறுகிறது.
அமெரிக்காவும் அதிகாரப்பூர்வமாக தைவானை இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் அதன் மூலோபாய நட்பு நாடாகவும், சுய-ஆளும் தைவானுக்கு மிகப்பெரிய ஆயுதங்களை வழங்குபவராகவும் உள்ளது.