இந்தியா

‘போலிக்கு இரையாகாதீர்கள்’ :ஈரானில் பல கடத்தல் சம்பவங்களை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

ஈரானுக்குப் பணி நிமித்தமாகச் செல்​லும் இந்​தி​யர்​களை அந்​நாட்​டில் உள்ள ஆள் கடத்​தல் கும்​பல் பணத்துக்காகக் கடத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தியர்களைக் கடத்திய பிறகு, அவர்​களை விடுவிக்க கணிச​மான தொகையை அளிக்க வேண்​டும் என்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் குடும்​பத்​தார் மிரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இந்​திய குடிமக்​களும் அனைவருக்கும் வேலை​வாய்ப்பு வாக்​குறு​தி​கள் அல்​லது சலுகைகள் குறித்து அதிக விழிப்​புணர்​வு இருக்க வேண்​டும். குறிப்​பாக, சுற்​றுலா செல்லும் இந்தியர்களுக்கு மட்​டும்​தான் விசா இல்​லாத அனு​ம​தியை ஈரான் அரசு அனு​ம​திக்​கிறது. சுற்​றுலா தவிர்த்த மற்ற வர்த்​தகம், வேலை போன்ற விஷ​யங்​களுக்கு கண்​டிப்​பாக விசா அவசி​யம். எனவே, ஈரான் விசா பெற்று தரும் முகவர்​களுக்​கும் குற்ற கும்​பல்​களுக்​கும் தொடர்பு இருக்​கலாம். இந்​தி​யர்​கள் மோசடி​யில் சிக்கி கொள்ள வேண்​டாம்’’ என்று இந்திய வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வடமேற்கு டெல்​லி​யில் உள்ள நரேலா​வைச் சேர்ந்த 26 வயது ஹிமான்ஷு மாத்​தூர் என்​பவர் ஈரானில் கடத்​தப்​பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகச் செய்​தி​கள் வெளி​யாகின. மாத்​தூரிடம் ஆஸ்​திரேலிய விசா​வில் கப்​பல்​களில் வேலை எளி​தில் கிடைப்​ப​தாக அமன் ரதி என்​பவர் ஆசை காட்​டி​யுள்​ளார். அதற்​காகவே நொய்​டா​வில் இருக்கும் தனி​யார் கல்வி நிறு​வனத்​தில் கப்​பல் துறை​யில் பட்டயக் கல்வியை மாத்தூர் முடித்தார். பின்​னர் தனது சகோ​தரர் மூலம் ரூ.12 லட்​சம் செலுத்தி ஈரானுக்கு அமன் ரதி​யுடன் பயணம் செய்​தார்.

ஈரானில் உள்ள சபாஹாரில், மாத்​தூருடன் அமன் ரதி​யும் அவர்​களது முகவருடன் தொடர்​புடைய ஒரு கும்​பலால் கடத்​தப்​பட்​டனர். 1 கோடி கேட்டு மிரட்​டிய​வர்​களிடம் பேசி ரூ.20 லட்​சம் அளித்த பின் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தியா திரும்​பிய பிறகு, அவர்​கள் செப்டம்பர் 7ஆம் திகதி டெல்லி காவல்துறையில் புகார் செய்​தனர்.

 

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே